அதிகஸ்ட பாடசாலையான கொல்லனுலை 100வீத சித்தியை பெற்று சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்தர் வித்தியாலயம், அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், 100வீத சித்தியினை பெற்று வலயத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் இருந்து தோற்றிய அனைத்து மாணவர்களும் தமிழ், கணிதப்பாடங்கள் உட்பட 3சீ, 3எஸ் பெறுபேறுகளுக்கு மேல் பெற்று உயர்தரம் கற்பதற்கு தகுபெற்றுள்ளனர்.

குறித்த பாடசாலை வலயத்திற்குட்பட்ட அதிகஸ்ட பாடசாலையாக காணப்படுவதுடன், எவ்விதமான தனியார் வகுப்புக்களும் இன்றி பாடசாலையை மாத்திரம் முழுமையாக பயன்படுத்தி இம்மாணவர்கள் இச்சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.