கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி : மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் கோவிட் தொற்றாளர்களாக 595 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் 21 மரணங்கள் சம்பவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை கிழக்கு மாகாணத்தில் 1,618,699 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. இதில் 874,447 பேருக்கு முதலாவது தடுப்பூசியும், 744,252 பேருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

20 தொடக்கம் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 284,990 பேருக்கும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களில்  629,933 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 138,417 பேருக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.