வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் படி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாடசாலைகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

கடந்த வருடங்களை விட எமது பாடசாலை மாணவிகள் இம்முறை சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். அதில் ஐந்து மாணவிகள் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

அந்தவகையில், எமது பாடசாலை சித்தி வீதத்தில் வலயத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவிகளுக்கும் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் குறிப்பாக எமது பாடசாலையின் க.பொ.த சாதாரண தர பிரிவின் இணைப்பாளர் ஆசிரியர் கே.ஆர்.எம்.இர்ஷாத் உட்பட கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.