பஸ் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் புதிய யோசனை முன்வைப்பு

கோவிட் பாதிப்பு அளவின் அடிப்படையில் மாகாணங்களை வகைப்படுத்தி பஸ் சேவைகளை மேற்கொள்வதற்கான புதிய யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

நோயாளர்  எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களும் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களாக வகைப்படுத்தப்படும். தீவிர நோய் பாதிப்புள்ள மாகாணங்கள் சிவப்பு நிறத்திலும் குறைந்த நோய் பாதிப்புள்ள மாகாணங்கள் மஞ்சல் நிறத்திலும் நோய் பாதிப்பற்ற மாகாணங்கள் பச்சை நிறத்திலும் அடையாளப்படுத்தப்பட்டு பஸ் சேவையை மேற்கொள்ள  யோசனையை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, சிவப்பு நிற மாகாணங்களின் பேருந்துகளில் 50 சதவீதமானோரும், மஞ்சள் நிற மாகாணங்களின் பேருந்துகளில் 100 சதவீதமானோரும் பயணிக்க முடியும்.

இதேவேளை, பச்சை நிற மாகாணங்களின் பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு  அதிகமாக பயணிகளை ஏற்றும்  நடைமுறை அடங்கிய யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.