நாட்டில் கோவிட் தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓரிரு வாரங்களில் கோவிட் மரண எண்ணிக்கை மேலும் குறைவடையும் என்றும் சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தடுப்பூசிகள் ஏற்றப்படுவதே இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் 52 சதவீதமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டுள்ளனர். மேலும், 64 சதவீதமானோர் ஒரு தடுப்பூசியை மட்டும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
20 தொடக்கம் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 13 சதவீதமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், 41 சதவீதமானோர் முதலாவது தடுப்பூசியை மட்டும் ஏற்றிக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகள் உடனடியாக தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ கேட்டுக்கொண்டுள்ளார்.