போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு வத்தள பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

48 வயதுடைய குறித்த நபர் மித்தெனிய, லெனரேல் தோட்டத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் ஒருந்து 52.380 கிராம் கேரள கஞ்சா மற்றும் இங்கிலாந்து தயாரிப்பான துப்பாக்கியும் ஒன்றும் அதற்கான தோட்டாக்கள் 90 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.