தடுப்பூசி ஏற்றல் வேலைத் திட்டத்தை குழப்ப சிலர் முயற்சி : சன்ன ஜயசுமன

கோவிட் தொற்றுநோயிலிருந்து மக்களை மீட்க அரசாங்கம் மேற்கொண்டுவரும் தடுப்பூசி ஏற்றல் வேலைத் திட்டத்தை சிலர் குழப்ப முயற்சிப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுவரை 30 வயதிற்கு மேற்பட்ட 98 சதவீதமானோருக்கு கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும்  சிலர் தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்கோடு தடுப்பூசி ஏற்றலை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.