மூன்றாம் தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டி ஏற்படும் : பேராசிரியர் நீலிகா மாலவிகே

எதிர்வரும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாம் டோஸாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி, ஒவ்வாமை மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  50 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டிய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இளம் வயதினருக்கு மூன்றாவது தடுப்பூசி தேவைபடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.