தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்பு : திருகோணமலையில் மற்றுமொருவர் கைது

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்திசாலை ஒன்றில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதியை சேர்ந்த 22 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே கைதான பிரதான சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.