சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்துவெளியிடும்போதே சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், கொவிட் தொற்றாளர்கள் மற்றும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்து வருவதால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாடு மீள திறக்கப்பட்டாலும் பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகள் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.