வறுமை நிலையிலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரட்டையர் சாதனை

இ.சுதா
அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள  போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட
மண்டூர் சக்தி மகா வித்தியாலத்திலிருந்து இம்முறை க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய இரட்டை சகோதரிகளான கீர்த்தனா ( 8A S)  கீர்த்திகா(7A B S) பெறுபேற்றினை பெற்று பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் எதுவித வருமானங்களும் இல்லாத நி லையில் பெற்றோரின் கூலி வேலையில் கிடைக்கும் மிகக் குறைந்தளவான வருமானம் மூலமாக குடிசை வீட்டில் வாழ்ந்து எதுவிதமான பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லாது சுயமாக பாடசாலையில் கற்றுக்கொண்ட விடயங்களை சகோதரிகள் தமக்குள் கலந்துரையாடி பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.