முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் எச்.ஹாரிதா 9A

ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டம்_கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி எச்.ஹாரிதா இரு நாட்களுக்கு முன்னர் வெளியான  க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும்  9 A சித்திகளைப் பெற்று தனது பாடசாலை சமூகத்திற்கும் முள்ளிப்பொத்தானை பிரதேசத்திற்கும் தனது குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த மௌலவி முகைதீன் வாபா ஹபீபுள்ளாஹ் மற்றும் சித்தி ஹனீஸா ஆகியோரின் புதல்வியான எச்.ஹாரிதா தரம் 01 தொடக்கம் தரம் 11 வரை முள்ளிப்பொத்தானை தி/கிண்/பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவியாவார். தரம் – 05 புலமைப் பரீட்சையிலும் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தனது பாடசாலைக் காலத்தில் தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலைக்கு சமூகம் தரும் மாணவியாகவும், தொடர்ந்தும் தனது வகுப்பில் முதல் நிலை மாணவியாகவே திகழ்ந்துள்ளார்.
எதிர்கால இலக்காக  மகப்பேற்று வைத்திய நிபுணராக தனது இலக்கினை அடையவுள்ளதாகவும் தெரிவித்தார்.
குடும்பத்தில் ஆறு பிள்ளைகளில் ஐந்தாவது பிள்ளையும் ஒரே ஒரு பெண் பிள்ளையும் ஆவார்.