திரியாய் சந்தி  -கோமரங்கடவெல பிரதான வீதி புனர்நிர்மாணம் நாமல் ஆரம்பித்து வைத்தார்.

ஹஸ்பர் ஏ ஹலீம்_
திரியாய் சந்தி  -கோமரங்கடவெல பிரதான வீதி புனர்நிர்மாணம் செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(22) இளைஞர் மற்றும் விளையாட்டு, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
32 கிலோமீற்றர் நீளமான இவ்வீதி நீண்டகாலமாக புனர்நிர்மாணம் செய்யப்படாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.இதற்காக 646 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திரியாய் கோமரங்கடவெலவூடாக புல்மோட்டை மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் குறுகிய பாதையாக இப்பாதை காணப்படுகின்றது.
இந்நிகழ்வில் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள, பிரதேச அரசியல் தலைமைகள், அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.