அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்

(எம்.ஐ.எம்.றியாஸ்)
அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இன்று  (22.09.2021) ஒரு மணித்தியாலயம் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
மதியம் 12.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரையும் நடைபெற்ற இப்போராட்டத்தில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொவிட் 19 தொற்றை எதிர் கொள்வதற்கு தேவையான வசதிகளைக் கொடு, கொவிட் 19 தொற்று முடியும் வரை 7500.00 ரூபா கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்கு, மேலதிக நேர விடுமுறை தின கொடுப்பனவுக் கட்டுப்பாடுகளை அகற்று, சகல சுகாதாரத் துறை வெற்றிடங்களையும் நிரப்பு, கொவிட் 19 விசேட விடுமுறையை தொடர்ந்தும் வழங்கு, பல்நோக்கு மேம்பாட்டுக் குழுவினரை சுகாதார நிலையங்களில் இணைப்பதை நிறுத்து போன்ற வாசகங்களை கூறி கோசங்களை எழுப்பி கோரிக்கைகளை  முன்வைத்து இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.