மட்டக்களப்பிற்கு நாளை நாமல் ராஜபக்ஸ விஜயம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பில் அபிவிருத்திகளை பார்வையிடும் நோக்குடனும் புனர் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை கையளிக்கவும் என தேசிய இளைஞர் விளையாட்டுதுறை மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நாளை (23.09.2021) காலை 10.00 மணிக்கு முதலாவது நிகழ்வாக வந்தாறுமூலையில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தினை கையளிக்கும் நிகழ்வில் கலந்தகொள்ளவுள்ளார்

மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரியவேலைத்திட்டமான ரூகம் கித்துள் குளங்களை இணைப்பது தொடர்பான வேலைத்திட்டத்தினையும் பார்வையிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மட்டக்களுப்புக்கான விஐயத்தினை நாளை மேற்கொள்கின்றார். குறிப்பாக பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிற்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றகூட்டத்தில் நாளை அமைச்சரின் வருகைதொடர்பான ஒழுங்கமைப்பு கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

நாளை அமைச்சர் பங்குகொள்ளவுள்ள இடங்கள் மாவட்டத்தில் அபிவிருத்திசெய்யவேண்டிய விடையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது இக்கூட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் ஏற்பாட்டில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு தமிழ் மக்கள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளருமான எஸ்.சந்திரகுமார் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி.சிறிகாந் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.