தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் மட்டக்களப்பில் நடாத்த ஏற்பாடு

தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை
மட்டக்களப்பிலும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்திட்டத்திற்கமைவாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் ரூபவ் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் ஒன்றினை எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதன் நிகழ்வுகளை கொரொனா நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ரூபவ் நிகழ்நிலை மூலமாக சிறப்பாக நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகாரன் தெரிவித்தார்.

தொழிற்படையின் ஆற்றல்கள் ரூபவ் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவுமிக்க மனிதவளத்தை வலுவூட்டுகின்ற அடிப்படையில் உலகளாவிய மட்டத்திலான தொழிற்படையை இலங்கையில் உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத் தேசிய தொழில் வழிகாட்டல் வாரத்தில் நான்கு (04) செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன.

இத்தேசிய தொழில் வழிகாட்டல் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கொவிட் சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு நிகழ்நிலை (ஒன்லைன்) ஊடாக நடைபெறும்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், தொழில் கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள், தனியார் தொழில்துறைசார் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் நிகழ்நிலையாக இணைந்து கொள்ளவுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள்,  18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான போட்டி நிகழ்வுகள் நிகழ்நிலை (ஒன்லைன்) மூலம் நடாத்தப்படவுள்ளது.

ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்களின் பெற்றோர்கள், பல்கலை கழக மாணவர்கள், தொழில் தேடுனர்கள் மற்றும் தொழில்
முயற்சியாளர்கள் ஆகியோரை வழிகாட்டும் ரூபவ் லைப் டோக் நிழ்வுகள் தமிழ்மொழி மூலமாக சூம்
தொழிநுட்பத்தின் ஊடாக நிகழ்நிலையாக நடைபெறவுள்ளன.

மேலும் தமது எதிர்காலம் குறித்து பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஊக்கிவிக்கும் வகையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான உளவியல் பரிசோதனை ஊடாக நிகழ்நிலையாக (ஒன்லைன்) வழிகாட்டப்படவுள்ளனர்.

இதுதவிர தொழில் தேடுகின்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரபல்யமான தனியார் நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் “மாவட்ட மட்டத்தில் தொழில் சந்தை” நிகழ்வும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி நிகழ்நிலையாக (ஒன்லைன் மூலம்) நடைபெறுவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் இன்றைய நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட மணிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.சுரேஸ்குமார் உட்பட மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.