தடுப்பூசி அட்டை இன்றி  பொது மக்கள் பொலிஸ் நிலையத்துள் நுழைய முடியாது–

காத்தான்குடி பொலிஸ்  நிலையத்தில் புதிய நடைமுறை

ரீ.எல்.ஜவ்பர்கான்–
கொவிட 19 தடுப்பூசி ஏற்றிய அட்டடையை வைத்திருப்போர் மாத்திரமே பொலிஸ் நிலையத்தினுள் தேவைகளைப் பெற அனுமதிக்கப்படுவார்கள் இவ்வாறு  காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
காத்தான்குடி  பொலிஸ் நிலையத்தில்  தேவைகளை நிறைவேற்ற  முறைப்பாடுகளைப் பதிவு செய்ய ஏனைய தேவைகளுக்கு வருபவர்கள் தங்களுக்கு ஏற்றப்பட்ட கொரோனா தடுப்பூசி அட்டையை கையோடு எடுத்து வரவேண்டும்.அவ்வாறு தடுப்பூசி அட்டை இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
பொலிஸ் நிலைய நுழைவாயிலில் தடுப்பூசி ஏற்றிய அட்டையை பொலிசார் பரிசோத்து வருவுதுடன் அட்டையை எடுத்து வராதோர் வீடுகளுக்குச் சென்று அட்டையை எடுத்து வந்து காண்பித்த பின்னரே அனுதிக்கப்பட்டனர்.