ஹெரோயின், ஐஸ், ,கசிப்பு மற்றும் கஞ்சா கடத்திய  7பேர் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்–
தற்போது அமுலிலுள்ள தனிமைப் படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி 7000 மில்லி லீற்றர் கசிப்பு 630 மில்லி கிராம் ஹெரோயின் ஒரு தொகை ஐஸ் மற்றும் கஞ்சா என்பவற்றைக் கடத்திய 7 பேரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

நேற்றிரவு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் உத்தரவின் பேரில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர் குமாரசிரியின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தலைமையிலான பொலிஸ் குழுவிளர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மாவிலங்கத்துறை காத்தான்குடி ஆகிய இடங்களிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.