மூதூரில் சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

மூதூரில் சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு
இஃஜாஸ்  ஏ பரீட்
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசிலிற்காக தெரிவுசெய்யப்பட்ட  மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு  நேற்று(17.09.2021) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரள தலைமையில் நடைபெற்றது.

கோவிட் வைரஸ் நிலையை கருத்திற்கொண்டு ஒரு சில மாணவர்கள் மாத்திரம் மூதூர் பிரதேச செயலகத்துக்கு அழைக்கப்பட்டு கொடுப்பனவு  வழங்கப்பட்டது.
சமுர்த்தி பயனாளி குடும்பங்களைச் சேர்ந்த க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் இத்திட்டத்தின் கீழ் 1500/- ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.
 உயர் தர முடியும் வரை இந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்மை விஷேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள,  மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாரக் ,பிரதேச அரசியல் தலைமைகள்  மற்றும் உரிய மாணவர்களும் கலந்து கொண்டனர்