கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் 

கதிவரன்
திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், இன்று புதன் 08-07-2021 காலை 10 00 மணிக்கு, திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் திரு தங்கராஜா அகிலன் அவர்களால்  இரண்டு லட்சம் பெறுமதியான 14 குருதி அமுக்கம்  பார்க்கும் கருவிகள் (CLOCK ANEROID SPHYGMOMONOMETER – DESK TYPE) நோயாளிகளின் அவசர தேவைக்கு பயன்படுத்த அன்பளிப்பாக வழங்கப்ப பட்டது.

திருகோணமலை பொது மருத்துவ மனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜெகத் விக்கிரமரத்ன அவர்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் அதன் தலைவர் அகிலன், மக்கள் தொடர்பாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன், திரு ரகுராம் மற்றும் செயலாளர் பிரபாகரனால் ஆகியோரால் தொற்றாளர் பாவனைக்காக கையளிக்கப்பட்ட்து.
ரோட்டரி கழக உறுப்பினர்களும், மருத்துவ மனையின் ஊழியர்களும் , கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..
இதட்குரிய நிதி லண்டனில் வசிக்கும் திரு பாலா கனகசபை மூலம்     “Batticaloa Under privillage Development Society – UK” வழங்கி வைத்தார்கள்.