மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 420 பயனாளிகளுக்கான சமுர்த்தி முத்திரை

பொன்ஆனந்தம்
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக சமுர்த்தி முத்திரை கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி உடைய 420 பயனாளிகளுக்கான சமுர்த்தி முத்திரை வழங்கும் நிகழ்வு (17.09.2021) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு  தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தலைமையில் மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாக சமுர்த்தி திட்டம் காணப்படுவதாகவும் வழங்கப்படுகின்ற உதவியை பயன்படுத்தி வறிய  நிலையில் இருந்து விடுபட்டு வருமானம் உழைக்க கூடியவர்களாக மாற அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற உதவிகளை தங்களுடைய நுகர்வு முயற்சிகளுக்கு பயன்படுத்துவதைவிடுத்து உற்பத்தி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் தங்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும்   என்று இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
நிகழ்வில் பிரதேச அரசியல் தலைமைகள், மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாரக்,  அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.