மகிழவட்டவானில் சக்திவாய்ந்த குண்டு மீட்பு

(வவுணதீவு நிருபர்)

மட்டக்களப்பு , ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவட்டவான் பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் குண்டொன்று  சனிக்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்

தனியார் காணியென்றில் நீர் குழாய் பதிக்கும் நடவடிக்கைக்காக குழி தோண்டும்போது மண்ணில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு ஒன்று வெளிவந்ததையடுத்து  பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இக்காணியில் கடந்த யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்திருந்ததாகவும்  தெரியவருகின்றது.

மேற்படி குண்டை அகற்றும் பொருட்டு குண்டு செயலிழக்கும் படைப்பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன்,  மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸ் நிலைய விஷேட புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.