கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் நோய் எதிர்ப்பு பானம் வழங்கி வைப்பு

கல்முனை  பிரதேசத்தில் கொரோனா வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கிவைப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.வை.இஸ்ஹாக் தலைமையில் இன்று இடம்பெற்றது.

கல்முனை மனித வள அமைப்பின் ஒத்துழைப்போடு கல்முனை கீரின் பீல்ட் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று குறித்த கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி பானம் விநியோகிக்கப்பட்டது.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக அதிமேதகு ஜானாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத்தின் வழிகாட்டலில் உரிய அதிகாரிகளின் பங்குபற்றுதலோடு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கொரோனா தொற்று தொடர்பாக ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வுகள் மேற்கோள்ளப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.