ஆயித்தியமலையில் 57 சாராயப் போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ்பிரிவில்  சட்டவிரோதமான முறையில்  மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை மதுபானப் ஆயித்தியமலை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பெண் ஒருவர் தனது வீட்டில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக குறித்த பெண் கைதுசெய்யப்பட்டதாக  பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 57 சிறிய சாராயப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.