மின் பாவனையாளர்கள் கட்டணங்களை செலுத்தாமையால் மின்சாரசபை பாரிய நெருக்கடியில்

இலங்கை மின்சார சபைக்கு மின்சார விநியோக கட்டணமாக ரூபா 44 மில்லியன் இன்னமும் கிடைக்கப்பெறாதுள்ளதனால் மின்சக்தி விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பின் அவர் மேலும் தேரிவித்துள்ளதாவது,

கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டித்து மக்களை அசௌகரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாகவே பாவனையாளர்கள் தங்கள் மின்கட்டணங்களை செலுத்தத் தவறியுள்ளனர். இதனால், கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை துண்டிக்க அரசாங்கம் எதனையும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனினும், பொதுமக்கள் தொடர்ந்தும் மின் கட்டணத்தை செலுத்த தாமதிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், இதனால் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்காது இருக்கமுடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.