அமைச்சர் மொஹான் பிரியதர்சன டி சில்வா ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்

கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன டி சில்வா ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஒலுவில் துறைமுகத்திலுள்ள குறைபாடுகளைக் நேரடியாகப் பார்வையிடுவதற்காக இன்று அவர் குறித்த விஜயத்தை மேற்கொண்டார்.

குறிப்பாக, ஒலுவில் துறைமுகத்தில் மண் மூடப்பட்ட பகுதிகளை இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார். அதன்பின், ஒலுவில் துறைமுக அதிகாரிகள் மற்றும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இது விடயமாக கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் கே.எம்.றிபாஸ் உட்பட உயர் அதிகாரிகள் மற்றும் துறைமுக அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அறுகம்பை, ஒலுவில், நிந்தவூர், காரைதீவு உள்ளிட்டபிரதேசங்களில் கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக  5 கோடி ரூபா ஒதுக்கீட்டில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை இராஜாங்க அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.