மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்பு

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக  அஜித் நிவாட் கப்ரால் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று  முற்பகல்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  அவருக்குறிய  நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் முன்னர் அமைச்சின் செயலாளராகவும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியிருந்தார்.

தற்போது அவர் மத்திய வங்கியின் ஆளுநராக இரண்டாவது தடவை நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.