8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நான்குபேர் கைது

தலைமன்னார், உருமலை கடற்பகுதியில் 8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர்கள் நால்வரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு இடம்பெற்ற கடற்படையினரின் விசேட ரோந்து நடவடிக்கையின்போதே  குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து  இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான படகொன்றை  கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர். இதன்போது,  அதிலிருந்து  9 கிலோ 914 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த  படகில் பயணித்த சந்தேக நபர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்  உருமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர்கள் நால்வரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும்  மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.