உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் இன்று தீர்மானம்

உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று தீர்மானிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில்,  இன்று தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பருிட்சைகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றய திகதிவரை பாடசாலை அதிபர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகவே, குறித்த விண்ணப்பங்கள் இதுவரை  சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.