நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜடால் மான்னப்பெரும இராஜினாமா

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜடால் மான்னப்பெரும  பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராஜினாமா தொடர்பில் ஊடகமொன்று அவரிடம் வினவியபோது, காரணம் இல்லாமல் தான் இராஜினாமா செய்யவில்லை என அவர் பதிலளித்துள்ளார்.

மேலும், இராஜினாமா செய்வதற்கு அவசியமான காரணங்கள் இருந்ததாகவும், அது பற்றி தற்போது கருத்துகூற விரும்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.