பாலியல் தொழில் குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூன்றுபேர் கைது

பாலியல் தொழில் மேற்கொண்டுவந்ததாக தலவத்துகொட பகுதியில் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை மற்றும் சீதுவ பகுதிகளைச் சேர்ந்த 39, 46 ஆகிய வயதுடய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த விடுதியில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.