வித்யாஜோதி இல்லத்தில்12 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று. மட்டில் பிரபல ஆசிரியையும் மரணம்.

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வித்யாஜோதி மாணவர் இல்லத்தில்12 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இல்லத்தில் உள்ள சிறுவன் ஒருவர் சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டபோது கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இன்று இல்லத்தில் உள்ள ஏனைய சிறுவர்கள் 13பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 11பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு பணிபுரியும் வேலையாட்கள் மூன்று பேரில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று மட்டக்களப்பின் பிரபல விஞ்ஞான பாடஆசிரியை விஜி ஜீவரெட்ணம் கொவிட் தொற்றினால்  திங்கட்கிழமை மரணமடைந்துள்ளார்.

இவரது உடல் இன்று தகனத்துக்காக பொலன்னறுவைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.