முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகாவிற்கு கொவிட் தொற்று

பதக்கம் வென்ற இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவின்படி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  அவரது குழந்தைகள் இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுசந்திகாவுக்கு பின்னர் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

சுசந்திகா ஜெயசிங்க இரண்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.