இலங்கையின் அவசரகால விதிமுறைகள் தொடர்பாக மனித உரிமைகள் பேரவை கண்காணிக்கிறது : மிச்செல் பெச்லெட்

Michele Bachelet, Presidente of Chile speaks during Special Session of the Human Rights Council. 29 March 2017.

இலங்கை அரசினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கண்காணித்து வருவதாக அப்பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்லெட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையினை சமர்ப்பித்து உரைநிகழ்த்தும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில்,  இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம்  மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பான உறுப்பு நாடுகளின் விவாதம் நாளை இடம்பெறவுள்ளது.