பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அடுத்த மாதம் தடுப்பூசி வழங்கல் திட்டம்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அடுத்த மாத முற்பகுதி தொடக்கம் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் தொடங்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மத்திய குழு உறுப்பினர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,  பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்களை உள்ளடக்கிய அறிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.