நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் இன்று கையளித்துள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்வதால் ஏற்படும் வெற்றிடத்திற்கு ஜயந்த கொட்டகொடவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ள அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது