கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை குறைந்துள்ளது : வைத்திய அதிகாரிகள் சங்கம்

கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை குறிபிட்டளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

நாட்டில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் தொற்றாளர்களினதும் மரணங்களினதும் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கொவிட் பாதிப்பினை தொடர்ச்சியாக குறைப்பதற்கு மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் இவ்வாண்டு இறுதிவரை மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி நடக்குமாறும் குறித்த சங்கத்தினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.