எந்தவொரு நாடும் அடையாத வீழ்ச்சியை இலங்கை அடையும் நிலைக்கு உள்ளாகும் : எதிர்கட்சி தலைவர்

கொவிட் தொற்றுநோய் பரவல் காரணமாக உலகின் எந்தவொரு நாடும் அடையாத வீழ்ச்சியை நமது நாடு அடையும்  நிலைக்கு உள்ளாகி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பற்ற மற்றும் தன்னிச்சையான ஆட்சியினாலேயே எமது நாடு இவ்வாறான மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எழுந்துள்ள பிரச்சனைக்கு அரசாங்கத்தின் அமைச்சர்களிடம் உரிய பதில் இல்லை எனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.