நாளை ஆரம்பமாகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இக்கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 46வது கூட்டத்தொடர் இடம்பெற்றபோது, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இத்தீர்மானங்கள் தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வாய்மூல அறிக்கையினை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் நாளைய கூட்டத்தொடரில் முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக உறுப்பு நாடுகளின் விவாதம் எதிர்வரும் செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.