சம்மாந்துறையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

முஸ்லிம் எயிட்  நிறுவன அனுசரணையில் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் குறித்த உலருணவு வழங்கும் நிகழ்வு சம்மாந்துறையில் நடைபெற்றது.

கொவிட் தொற்றுநோய் பரவுதலை தடுப்பதற்காக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட அன்றாட கூலித்தொழில் செய்யும் குடும்பங்களுக்கே இவ்வாறு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

முஸ்லிம் எயிட்ஸ் நிறுவன நிதி அனுசரணையில் பிரதேச பள்ளிவாசல்கள் மற்றும்  கிராம சேவகர்கள்  மூலம் தெரிவு செய்யப்பட்ட 185 குடும்பங்களுக்கு தலா 2500 ரூபா பெறுமதியில் குறித்த உலருணவுகள் பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முஸ்லிம் எயிட் நிருவன  இணைப்பாளர் எம்.ஏ.எம். அஸ்மி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்  கலந்துகொண்டனர்.