நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பொத்துவில் கொட்டுக்கல் பிரதேசத்திற்கு களவிஜயம்

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்  பொத்துவில் கொட்டுக்கல் பிரதேசத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை களவிஜயம் செய்தார்.

இதன் போது அங்குள்ள  மீனவர்களை நேரில் சந்தித்ததுடன் தொழில் ரீதியாக அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் அத்தியாவசிய கோரிக்கைகள் என்பவற்றை கேட்டறிந்ததோடு அதற்கான தீர்வுகளை உடனடியாக பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

இச்சந்திப்பின் பின்னர்,  பொத்துவில் ஹிதாயா புரத்தில்  அமைந்துள்ள தவிசாளர் பூங்காவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்ததோடு அங்கு நடைபெறவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் பற்றி பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.