திருகோணமலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் : வீதிகளில் நடைபாதை வியாபாரம் மும்முரம்…

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

நகர் பகுதியில் அனேகமான  வர்த்தக நிலையங்கள் மூடப் பட்டிருக்கும் நிலையில் நகரின் பெரும்பாலான பிரதான வீதிகளில் நடைபாதை வியாபாரிகள் அதிகரித்து காணப்படுவதுடன் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமால்  பொருள் கொள்வனவில் ஈடுபடுவது கொரோனா தொற்றினை மென்மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் வீடுகளுக்கு சென்று அத்தியவசிய உணவுப் பொருட்கள் விநியோகிப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் பிரதேச செயலாளர் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு வீதியோர வியாபாரத்தில் ஈடுபடுவது  ஊரடங்கு சந்தர்ப்பத்தில் மக்கள் பொருள் கொள்வனவுக்காக வெளியில் செல்வதத்திற்கு வாய்ப்புள்ளதாகவும். ஊரடங்கு சட்டத்தை மீறும் செயல் ஏன்றும் இதனால் நகரத்தின் பெரும்பாலான வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் இவ்வாறு தேவையற்ற விதத்தில் வீதிகளை பயணிப்பதும் ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை உடன் நிறுத்தி மாவட்டத்திலிருந்து கொரோனா தொற்றினை முற்றாக ஒழிப்பதற்கு வர்த்தகர்கள்,வியாபாரிகள் பொதுமக்கள் என அனைவரும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மதித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.