ரணசிகிச்சை நிபுணர்  டாக்டர் பீ கே.ரவீந்திரனுக்கானபிரியாவிடை வைபவம்

ஏ.பி.எம்.அஸ்ஹர்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுமார் ஐந்து வருடங்கள்  பணியாற்றி  சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுகின்ற ரணசிகிச்சை நிபுணர்  டாக்டர் பீ கே.ரவீந்திரனுக்கானபிரியாவிடை வைபவம் இன்றுஅக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலை இடம் பெற்றது.

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அசாத் எம்.ஹனீபா தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் .

இதன் போது டாக்டர் பீ கே.ரவீந்திரன் வாழ்த்துப்பா மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவர் ஏற்கனவே கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றிய போது கல்முனைப்பிராந்திய பொது மக்களின்நன்மதிப்பையும் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது