ஆயித்தியமலை பொலிஸாரால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையில் ஒருவர் கைது , கசிப்பு கோடா மீட்பு! 

(வவுணதீவு நிருபர் )
மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு, கோடா பரல் போன்றவையும் மீட்கப்பட்டதாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். ஆர். எஸ். கோனர தெரிவித்தார்.
ஆயித்தியமலை நெல்லூர்  காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோது புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக வெள்ளிக்கிழமை மாலை (10) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பரல், கொள்கலன்களில் நிரப்பப்பட்ட 180 லீற்றர் கோடா, ஒன்றரை லீற்றர் கசிப்பு போன்றவற்றுடன் ஒருவர் கைது செய்யப்படுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். ஆர். எஸ். கோனர தெரிவித்தார்.
ஊரடங்கு முடக்க காலத்தை சாதகமாக பயன்படுத்தி காட்டுப்பகுதியில் இவ்வாறான சமூக விரோத நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுவருவதாகவும், இதனை முற்றாக ஒழிக்க தாம் விஷேட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட நபரையும், கசிப்பு உள்ளிட பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆயித்தியமலை பொலிஸார் பொறுப்பதிகாரி தெரிவித்தனர்.