இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் முயற்சியால் மட்டக்களப்பிற்கு தொழிநுட்ப பூங்கா!!

(கல்லடி நிருபர்)
நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் பால் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இலங்கையில் ஐந்து மாவட்டங்களில் சுமார் பத்தாயிரம் மில்லியன் ரூபா செலவில் “தொழினுட்ப பூங்காக்கள்” அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத்தொழில்நுட்ப பூங்காக்கள்  மட்டக்களப்பு, காலி, குருணாகல், அனுராதபுரம், கண்டி ஆகிய ஐந்து  மாவட்டங்களில் நிறுவப்பட்டவுள்ளன. 2021 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பிரேரிக்கப்பட்டதற்கமையவே குறித்த “தொழில்நுட்ப பூங்கா அபிவிருத்தி” என்றழைக்கப்படும்  நிறுவனம் மிக விரைவில் ஐந்து மாவட்டங்களிலும் நிறுவப்படவுள்ளன.
இதனடிப்படையில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்
சதாசிவம் வியாழேந்திரனின் முன்மொழிவிற்கு அமைய மட்டக்களப்பில் நிர்மானிக்கப்படவுள்ள “தொழில்நுட்ப பூங்கா அபிவிருத்தி” திட்டத்தின் ஊடாக எதிர் காலத்தில் அதிகளவான இளைஞர் யுவதிகளுக்கு தொழினுட்ப துறை சார்ந்த வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது