30 வயதிற்கு மேற்பட்ட ஒரு கோடி மக்களுக்கு குறுகிய காலத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை இலங்கை அடைந்துள்ள பாரிய வெற்றியாகும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு கோடியே 20 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி நேற்று வரை செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும்.
எனவே, குறுகிய காலத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு கோடி மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை எமது நாட்டிற்கு பாரிய வெற்றியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 20 தொடக்கம் 30 வயதுடையவர்களுக்கு ஆறு மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.