கோவிட் தொற்று பரவுகை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை மீள திறப்பது குறித்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி முடிந்தவுடன் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும்,
கோவிட் தொற்றுநோய் பரவல் காரணமாக பாடசாலைகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளை மீண்டும் தொடங்க 12 தொடக்கம் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசிகளை விரைவாக செலுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை, உலக சுகாதார நிறுவனம் உட்பட சர்வதேச நிறுவனங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பல அளவுகோல்களை சுட்டிக்காட்டியுள்ளன. குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கல் ஆரம்பிக்கும்போது தரம் 7 முதல் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.