திருமலையில்  துப்பாக்கியுடன் இருவர் கைது.

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) 

திருகோணமலை-நாமல்வத்த காட்டுப்பகுதியில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியை மறைத்து வைத்துக்கொண்டு வேட்டையாடிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து குறித்த நபர்களை கைது செய்து விசாரணை செய்தபோது  அவர்களிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாகவும் வேட்டையாடிய மானின் தோல் மற்றும் எலும்புகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.