சாணக்கியனின் மண்குற்றச்சாட்டு ஆளுநரின் அதிரடி உத்தரவு.

ஹஸ்பர் ஏ ஹலீம்_
சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்று (09) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு (IGP) உத்தரவிட்டார்.
கிழக்கு மாகாணத்தின் இது தொடர்பில் .
டிஐஜி விசாரணையை நடத்தி, சம்பந்தப்பட்ட அறிக்கையை மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஷவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரசாங்கம், அரசாங்க அமைச்சர்கள், ஆளும் தரப்பு கட்சி அரசியல்வாதிகள் மற்றும் தனக்கான தனிப்பட்ட சலுகைகளைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தில் மணல் அகழ்வு தொடர்பாக இராசமாணிக்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக அவர் கூறினார்.

மகாவெலி ஆற்றின் சுற்றுப்புறத்தில் மணல் அகழ்வு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தால் முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க பல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் அவர் வலுவான முடிவுகளை எடுத்ததாக ஆளுநர் வலியுறுத்தினார்.

சட்ட விரோத மணல் அகழ்வுகளை நிறுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் கடற்படைக்கும் அறிவுறுத்தினார்.

சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையான உத்தரவுகளை பிறப்பித்ததாகவும் ஆனால் எந்த விசாரணையும் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஆளுநர் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஆளுநர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்தின் பொறுப்பான சிரேஷ்ட  டி.ஐ.ஜி இந்த குற்றச்சாட்டுகளின் உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவார் என்றும் அவர் நம்புகிறார் .