கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் பிற்போடப்பட்டுள்ளது

எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயமான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் நாளை ஆரம்பமாகவிருந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற கோவில் நிர்வாகத்தினரின் கூட்டத்தில் நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமான சுகாதார நிலையினை கருததிற்கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆலயத்தின் திருவிழா பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய வண்ணக்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் கொரோனா தொற்று காரணமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் நாளை(08) ஆலயத்தின் மகோற்சவ பூசைகள் 15 பணியாளர்களை மாத்திரம் அனுமதிக்கப்பட்டு தேரோட்ட பெருவிழா நடைபெறாமல் சாதாரண பூசைகளுடன் நடைபெற இருந்த நிலையில் மேற்படி அறிவிப்பானது ஆலய நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற்போடப்பட்ட ஆலய திருவிழா தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.